You are here

பாடல்களைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட கவுதம்

  • கவுதம், நிக்கி கல்ராணி.

பொதுவாக ஒரு படத்தின் கதையைக் கேட்டுத்தான் அதில் நடிக்க தீர்மானிப்பார்கள் நடிகர்கள். ஆனால் பாடல்களைக் கேட்டு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் கவுதம் கார்த்திக். அப்படத்தின் பெயர் ‘ஹர ஹர மகாதேவகி’. சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி உள்ள இப்படத்தில் கவுதம் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித் துள்ளார். கவுதம் மனதை வெகு வாகக் கவர்ந்த இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்தி ருப்பவர் பாலமுரளி பாலு. இரு தினங்களுக்கு முன்னர் இந்தப் பாடல்கள் வெளியிடப்பட்டன. ‘ஹர ஹர மகாதேவகி’யில் மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்த தாகத் தெரிவித்துள்ள கவுதம், மிகக் கடினமான காலகட்டத்தில் இப்பட வாய்ப்பு தன்னைத் தேடி வந்ததாகக் கூறியுள்ளார்.

“இந்தப் படத்தின் கதை பல ரிடம் கூறப்பட்டு, கடைசியாக என்னைத் தேடி வந்தது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களைத் தான் போட்டுக் காண்பித்தார். “பாடல்களை நான் மிகவும் ரசித்து சிரித்துக் கேட்டேன். உடனே இந்தக் கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகுதான் இயக்குநர் முழுக் கதையையும் என்னிடம் கூறினார். அந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்கிறார் கவுதம்.