You are here

சீமான்: நீட் தேர்வை எழுதிய பின் அதை ஆதரித்து தமிழிசை பிரசாரம் செய்யட்டும்

  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை: நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழிசை சௌந்தர ராஜன், அந்தத் தேர்வை எதிர் கொள்ளத் தயாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதை ஆதரித்து தமிழிசை பேசினால் அதை எதிர்க்கப் போவதில்லை என்றார். மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல் வேறு அமைப்புகள் நீட் தேர்வுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், நாள்தோறும் போராட் டங்களையும் நடத்தி வருகின்றன.

நீட் தேர்வு காரணமாக மருத் துவம் படிக்க இடம் கிடைக்காத மாணவி அனிதா, தன் உயிரை மாய்த்துக்கொண்டதை அடுத்து, அத்தேர்வை முழுமையாக ரத்து செய்யும் கோரிக்கை தமிழகத்தில் எழுந்து, வலுத்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழிசை பேசி வரு வதை அறவே ஏற்க இயலாது என சீமான் தெரிவித்துள்ளார். “நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழிசை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர் நீட் தேர்வு எழுதட்டும். அதன் மூலம் மீண்டும் ஒருமுறை புதிதாக மருத்துவராக பட்டம் பெறட்டும். அதன் பிறகு வேண்டுமானால் அவர் நீட் தேர்வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளட்டும்,” என்றார் சீமான். இதற்கிடையே, ‘தமிழர்கள் சாதி ரீதியாகப் பிரிந்திருக்கும் வரை தமிழ்த்தேசியம் எட்டாக்கனி’ எனத் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் பேசியிருப்பது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், ரஞ்சித் சொல்வது உண்மைதான் என்றும் சாதியாகப் பிரிந்திருக்கும் வரை தமிழர்கள் என்ற ஒற்றுமை வராது என்றும் கூறினார்.

“இன ஒற்றுமை வராமல் அரசி யல் வலிமை வராது. அரசியல் வலிமை பெறாமல் அதிகார வலிமை பெற முடியாது. இதுதான் அடிப்படை. “அவரின் கருத்தில் உள்ள உண்மையை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழர்களாக ஒன்றிணைவது சாத்தியமில்லை என்ற ரஞ்சித்தின் கருத்தை ஏற்க முடியாது,” என்றார் சீமான். இதற்கிடையே நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்று வரும் போராட் டங்கள் நீடிக்கும் என அதன் நிர் வாகிகள் திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளனர். இந்தப் போராட்டங்களில் சூழ் நிலைக்கும் நேரத்துக்கும் ஏற்ப சீமான் கலந்துகொள்வார் என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர். நீட் தேர்வுக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்