You are here

முன்மாதிரி யாருமில்லை - அதுல்யா

காதல் மீது நம்பிக்கை உண்டு, ஆனால் காதலிக்க நம்பிக்கை இல்லை என்கிறார் இளம் நாயகி அதுல்யா. இவர் அறிமுகமான படம் ‘காதல் கண் கட்டுதே’. தற்போது சமுத்திரக்கனியுடன் ‘ஏமாளி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்திலும் இவரைப் பார்க்க முடியும். அஜித், விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என்று அனைத்து நாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும், இதை லட்சிய மாகக் கொண்டிருக்கவில்லையாம். வாய்ப்பு கிடைத்தால் நடிக்கத் தயார் என்கிறார். அதுல்யாவுக்கு சினிமாவில் ரோல் மாடல் என யாரும் இல்லை.

நயன்தாராவின் தைரியமும் நடிப்பும் பிடிக்குமாம். நடிப்பில் யாரையும் பின்பற்ற விரும்பவில்லை என்று திட்டவட்டமாகச் சொல்பவர், தனக்கு எத்தகைய நடிப்பு வருமோ அதை மட்டுமே வெளிப்படுத்த விரும்புகிறார். “எந்தத் துறையில் வேலை பார்த்தாலும் அதில் கிடைக்கும் அனுபவங்கள் நம் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும். அப்படித்தான் சினிமா துறையையும் பார்க் கிறேன். தனிப்பட்ட வகையில் இங்கு கிடைக்கும் அனு பவங்கள் பல்வேறு விஷயங்களை எதிர் கொள்ள உதவியாக இருக்கிறது,” என்று சொல்லும் அதுல்யா கோயமுத்தூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை சொந்தமாகத் தொழில் செய்கிறார், அம்மா இல்லத்தரசி. ஒரு தம்பியும் உள்ளார். வீட்டில் தாத்தா, பாட்டி உடன் தங்கி இருப்பதால் எப்போ துமே சூழ்நிலை கல கலப்பாக இருக்குமாம்.