You are here

ஐநா தடை தீர்மானத்தை நிராகரித்தது வடகொரியா

நியூயார்க்: வடகொரியாவுக்கு எதிராக கடும் தடைகள் விதிக்க வகை செய்யும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு மன்றம் நிறைவேற்றிய நிலையில் அத்தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது. கடுமையான தடைகள் மூலம் அமெரிக்கா தொடர்ந்து நெருக்கு தல் கொடுத்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டி வரும் என்று வடகொரியத் தூதர் ஹான் டே சோங் தெரிவித்துள்ளார். வடகொரியா 6வது தடவை யாக மிகப்பெரிய அணுவாயுத சோதனையை மேற்கொண்டதை அடுத்து அந்நாட்டின் மீது புதிய தடைகளை ஐநா விதித் துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களை வட கொரியா இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் மற்றும் அந்நாடு ஜவுளி ஏற்றுமதி செய்வதற்குத் தடை ஆகியவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும். வடகொரியாவின் பெரும் பாலான எண்ணெய் தேவையை ரஷ்யா மற்றும் சீனா பூர்த்தி செய்து வரும் நிலையில் எண்ணெய் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பணியாற்றும் வடகொரியர்களின் எண்ணிக் கைக்கு வரம்பு நிர்ணயம் செய்யப் பட்டிருப்பதும் புதிய தடைகளில் அடங்கும்.