You are here

‘மோடியின் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன்’

பகல்பூர்: லாலு பிரசாத் யாதவ் மீதான ரயில்வே ஊழல் வழக்கில் சிபிஜ விசாரணை பற்றி பேசிய அவர், பிரதமர் மோடியின் இது போன்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் என்றார். பீகாரில் நிதிஷ் குமார் அரசு ரூ.1,200 கோடி அளவுக்கு ஸ்ரீஜன் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி வரும் லாலு, இதற்கு எதி ராக நேற்று முன் தினம் பகல்பூரில் பொதுக்கூட்டம் நடத்தினர். அதில் பேசிய அவர், “ஸ்ரீஜன் ஊழலுக்கு எதிராக எங்கள் கட்சி நடத்தும் இந்தக் கூட்டத்தைத் தடுக்க, சிபிஐ அமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. “ஏனெனில், ரயில்வே ஊழல் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்துவதற்காக நாளை டெல் லிக்கு வருமாறு சிபிஐ அழைத்து உள்ளது. ஆனால் அங்கு போவதைத் தவிர்ப்பதன் மூலம் ஸ்ரீஜன் வழக்கின் உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க முடிவு செய்துள்ளேன்.

“என் மீதும் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதிவு செய் வதன் வழியாகவும் சிபிஐ மூலமும் என்னை அச்சுறுத்த முடியாது. “மோடியின் வெற்று மிரட்டல் களுக்கு நான் அஞ்சப் போவது இல்லை,” என்று சொன்னார்.