You are here

ராதே மா உள்ளிட்ட 14 போலி சாமியார்களின் பெயர்கள் வெளியாயின

அகில பாரதிய அக்காரா பரிஷத் என்ற இந்து சாதுக்களின் தலைமை அமைப்பானது குர்மீத் சிங், ஆசாராம் பாபு, ராதே மா உள்ளிட்ட 14 போலி சாமியார் களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது. போலி சாமியார்களிடம் ஏமாற வேண்டாம் என்று மக்களை எச்சரிப்பதற்காக அலகாபாத்தில் உள்ள இந்த அமைப்பு இத்தக வலை வெளியிட்டு உள்ளது. அதில் ஆசாராம் பாபு, ராதே மா, சச்சிதானந்த கிரி, குர்மீத் சிங், பாபா ஓம், நிர்மல்ஜித் சிங், இச்சாதாரி பீமானந்த், சுவாமி அசீமானந்த், ஓம் நமக சிவாய் பாபா, நாராயண் சாய், ராம்பால், ஆச்சார்யா குஷ்முனி, பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங் ஆகியோர் போலி சாமியார்கள் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. “பாரம்பரியத்திற்கு உட்படாத மற்றும் கேள்விக்குரிய செயல் களில் ஈடுபடும் இதுபோன்ற சாமி யார்களிடம் கவனமாக இருக்க வேண்டும். “இவர்களால் பிற சாதுக்கள், முனிவர்களுக்கு அவமரியாதை ஏற்படுகிறது,” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 28 போலி சாமியார்களின் பெயர்கள் அடங் கிய பட்டியல் வெளியிடப்படும் எனவும் அந்த அமைப்பு கூறி உள்ளது.