You are here

கட்டடங்களில் பாதுகாப்பை மேம்படுத்த புதிய சட்டம்

தீவிரவாத இலக்காகக் கருதப்படும் கட்டடங்களில் பாதுகாப்பை அதி கப்படுத்தும் புதிய சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டது. எங்கும் தீவிரவாத மிரட்டல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் உத்திபூர்வமான, தேசிய சின்னங்களான அல்லது பெரிய கட்டடங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய உள் கட்டமைப்பு பாதுகாப்பு மசோதா எனும் புதிய மசோதாவை நேற்று முதல் வாசிப்புக்கு முன்வைத்தார் உள்துறைக்கான இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ.

இந்த மசோதாவின் இரண்டா வது, மூன்றாவது வாசிப்பும் அதன் தொடர்பிலான விவாதமும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இடம் பெறும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அதன் சட்டம் புதிய கட்டடங்களில் ‘சிறப்பு மேம்பாடு களை’ உருவாக்கவும் தற்போதைய கட்டடங்களில் ‘சிறப்பு உள்கட்ட மைப்புகளை’ உருவாக்கவும் உள் துறை அமைச்சுக்கு அனுமதியளிக் கும். இப்படிப்பட்ட புதிய கட்டடங் கள் வடிவமைக்கப்படும்போதே பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். தற்போதைய கட்டடங்களில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது பாதுகாப்பு அம்சங்கள் அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.