You are here

வெற்றியை சுவைத்த நியூகாசல்

  •  படம்: ராய்ட்டர்ஸ்

சுவான்சி: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் சுவான்சிக்கு எதிரான ஆட்டத்தில் நியூகாசல் 1=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் நியூகாசலின் அணித் தலைவர் ஜமால் லசிலேஸ் போட்ட கோல் அக்குழுவுக்கு மூன்று புள்ளிகளைப் பெற்றுத் தந்தது. இந்தப் பருவத்தில் இரண்டாம் நிலை லீக்கிலிருந்து இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்கு முன்னேறிய நியூகாசல் இதுவரை நினைத்தபடி செயல் படவில்லை. நான்கு ஆட்டங்களில் களமிறங்கியுள்ள நியூகாசல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி யைத் தழுவியது.

எனவே, சுவான்சிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியைச் சுவைத்த நியூகாசல் புத்துணர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆட்டத்துக்கு நியூகாசல் நிர்வாகி பெனிடேஸுக்கு வர முடியாத சூழ்நிலை. அண்மையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக அவருக்கு இன்னொரு அறுவை சிகிச்சை நடத்தப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நிர்வாகி உடன் இல்லா விட்டாலும் முனைப்புடன் விளை யாடிய நியூகாசல் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டம் தொடங்கி யதிலிருந்து அக்குழு தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால் பந்தை வலைக்குள் புகுத்த முடியாமல் தவித்தது.

பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பும் நியூகாசலின் ஜமால் லசிலேஸ் (இடமிருந்து இரண்டாவது). படம்: ராய்ட்டர்ஸ்