You are here

இர்மா புயலால் S$268 பில்லியன் சேதம்

ஃபுளோரிடா: இர்மா புயலின் மையம் ஃபுளோரிடாவின் பெரும் நிலபரப்பைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. புயல் காற்றின் உயரம் 15 அடி வரை இருக்கக்கூடும் என்று முன்னரே எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையில், இந்தப் புயல் ஃபுளோரிடா மாநில மேற்குக் கரையில் உள்ள நேப்பல்ஸ் பகுதிக்குத் தெற்கே கடுமையான சேதங்களை உருவாக்கியுள்ளது. ஃபுளோரிடாவின் மேற்குக் கரையில் உள்ள மார்க்கோ தீவுகளில் இர்மா புயல் மையம் கொண்டிருந்தது. இங்கு மணிக்கு 169 கி.மீ வேகத்தில் காற்று வீசியபோதும் இஃது இரண்டாம் நிலை புயலாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. ஃபுளோரிடா மாநிலத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மயாமி நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் இர்மா புயல் தாக்கத்தால் மணிக்கு 209 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று ஃபுளோரிடா கீஸ் கீழ்ப்பகுதியில் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது.