You are here

‘சொத்துகளைக் குவித்த அரசியல்வாதிகள்’

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பி னர்கள், எம்எல்ஏக்கள் தங்களது வருமானத்திற்கும் அதிகமான சொத்துகளைச் சேர்த்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் பெயர் களை ஆணையம் இன்று நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய உள் ளது. எம்பி, எம்எல்ஏக்களின் சொத் துகள் வருமானத்தைவிட அதி கரித்து வருவதாக உச்ச நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுத் தொடர்பாக நீதி மன்றத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் 26 நாடாளுமன்ற எம்பிகள், 11 மேலவை எம்பிகள், 257 எம்எல்ஏக்களின் சொத்துகள், தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களிடம் வருமான வரித் துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில் 7 எம்பிக்கள், 98 எம்எல்ஏக்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது. மேலும் 42 எம்எல்ஏக்களின் சொத்து உயர்வு குறித்து மதிப் பிடும் பணிகள் நடைபெற்று வருவ தாகவும் ஆணையம் உச்ச நீதி மன்றத்தில் கூறியுள்ளது.