You are here

‘ஒட்டுமொத்த நலனுக்காக சேர்ந்து செயல்படுவோம்’

  • படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

மக்களின் குரலாகப் பிரதிபலிக் கவும் அவர்களது கருத்துகளை எடுத்துரைக்கவும் நாடாளுமன்றம் முக்கியப் பங்காற்றுகின்றது என் றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாகக் கேள்விகள் எழுப்பி, பதில்கள் கூறி, நம்பிக்கையும் தெளிவும் அளிக்கும் விதத்தில் விவாதிக்கவும் வேண்டும் என்று புதிதாகப் பதவியேற்றுள்ள நாடாளு மன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் புதிய நாய கராக நேற்று பொறுப்பேற்ற பிறகு திரு டான் ஆற்றிய முதல் உரை யில், நாடாளுமன்றத்தில் சிறந்த, தடையற்ற விவாதம் நடைபெற வழிவகுக்கவும் எந்தப் பக்கமும் சாராமல், நியாயமாக, திடமாக நடந்துகொள்ளவும் தாம் செயல்பட உறுதி மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி யினர் இருப்பது அறிவுபூர்வ விவா தத்திற்கான ஆக்கப்பூர்வ, வலு வான ஒரு முயற்சி என்றும் எதிர் காலத்தில் இத்தகைய விவாதங்கள் மேலும் சிக்கலானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். நமது ஒட்டுமொத்த நலனுக் காகப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் அவற்றைப் பற்றி நம் பிக்கையுடன் பேசவும் நாடாளு மன்றம் சிங்கப்பூரர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ அனைத்து நாடாளுமன்ற உறுப்பி னர்களும் தம்முடன் அணுக்கமாக உழைக்க வேண்டும் என திரு டான் கோரினார்.

நாடாளுமன்றத்தின் புதிய நாயகராக நேற்று பொறுப்பேற்று கொண்ட திரு டான் சுவான் ஜின், முன்னாள் நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப் ஆகியோர் பற்றிய சிறப்புகளை மன்றத்தில் எடுத்து உரைத்தார் நாடாளுமன்ற அவைத் தலைவர் அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு