You are here

சீனாவின் வங்கிகள் விதித்த தடையால் வடகொரிய வர்த்தக உறவுக்கு மிரட்டல்

புதிய பொருளியல் தடை விதிக் குமாறு ஐக்கிய நாடுகள் மன் றத்தை அமெரிக்கா தொடர்ந்து நெருக்கினால் அது கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா எச்சரித்து உள்ளது. அண்மையில் தான் நடத்திய ஆறாவது அணுவாயுதச் சோத னையைத் தொடர்ந்து பொருளியல் தடையை அதிகரித்து அந்நாட்டைத் தனிமைப்படுத்த அமெரிக்கா தீவி ரமாகச் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட வடகொரியா, அமெ ரிக்கா அதன் போக்கைத் தொடர்ந் தால் கடுமையான வேதனையும் பாதிப்பும் அதற்கு நேரிடும் என்று வடகொரிய வெளியுறவு அமைச் சின் பேச்சாளர் எச்சரித்துள்ளார். “நாங்கள் நடத்திய அணு வாயுதச் சோதனை எங்களது முறையான தற்காப்பு நடவடிக்கை தான். ஆனால், அதனைப் பெரி தாக்கி எங்கள் மீது புதிய பொருளியல் தடைகளை விதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றத்தை நெருக்கி அமெரிக்கா மூர்க்கத்தனமாக நடந்துகொள் கிறது. “சட்டவிரோதமான பொருளி யல் தடையைக் கடுமையாக்கும் தீர்மானத்தின் மீது அமெரிக்கா தொடர்ந்து நாட்டம் கொள்ளு மானால் அதற்கான விலையை அது தந்தாக வேண்டும்,” என்றார் அவர்.