You are here

துருக்கி எல்லையில் தவிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படக்குழு

  • ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இடம்பெறும் காட்சியில் விக்ரம்.

படப்பிடிப்புக்காக துருக்கி சென்ற ‘துருவ நட்சத்திரம்’ படக்குழுவினரை அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். 24 மணி நேரத் துக்கும் மேலாகப் படக்குழுவினர் துருக்கி தலைநகருக்குள் நுழைய முடியாமல் சாலையிலேயே காத்துக் கிடப்பதாக இப்படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் கவலை தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பை துருக்கியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கு சில முக்கிய காட்சிகளைப் படமாக்குவ தாகத் திட்டம். இதற்காகப் படக்குழுவினர் ஜார்ஜி யாவில் இருந்து சாலை வழி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கிச் சென்றுள்ளனர்.

ஆனால் துருக்கி எல்லையில் இவர்களை அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டன ராம். இத்தனைக்கும் படப்பிடிப்பு நடத் துவதற்குரிய அனுமதி ஆவணங்கள், விசா என அனைத்தும் படக்குழு விடம் உள்ளதாம். “என் படக்குழுவினர் துருக்கி எல்லையில் சிக்கியுள்ளனர். 24 மணி நேரத்துக்கு மேலாகச் சாலையில் நிற்கின்றனர். படக்குழுவிடம் சட்டபூர் வமான ஆவணங்கள் இருந்தும் படப் பிடிப்பு சாதனங்களுடன் குழுவை உள்ளே விட அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். “படக்குழுவினர் கேமரா மற்றும் படப்பிடிப்புக்குத் தேவையான ஆடை களுடன் சென்றுள்ளனர். இப்போது எல்லையில் அனுமதி கிடைக்காமல் சிக்கியுள்ளனர். அதிகாரிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை,” என கௌதம் மேனன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து படக்குழுவுக்கு என்ன ஆனது? என்பது குறித்து மேல் விவரம் எதையும் அவர் இதுவரை வெளியிடவில்லை.

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இடம்பெறும் காட்சியில் விக்ரம்.