You are here

ஹலிமாவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு

நாடாளுமன்றத்தில் பேசிய உறுப் பினர்களில் பெரும்பாலோர், நான் காண்டுகள் மன்ற நாயகராகச் சேவையாற்றிய திருவாட்டி ஹலி மாவுக்கு நன்றி கூறியதோடு அவரது வருங்காலத் திட்டங் களுக்கு வாழ்த்தும் கூறினர். அதிபர் தேர்தலில் போட்டியிடு வதற்காக ஆகஸ்ட் மாதம் பதவி விலகிய திருவாட்டி ஹலிமா யாக்கோப்பை மன்ற உறுப்பினர்கள் பாராட்டினார்கள். நாடாளுமன்றத்தில் பிரமுகர் களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் தமது கணவர் முகம்மது அப்துல்லா அல் ஹப்‌ஷீவுடன் திருவாட்டி ஹலிமா அமர்ந்திருந்தார்.

திருவாட்டி ஹலிமா நாடாளு மன்ற நாயகராகப் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள்ளேயே மக்கள் தொகை குறித்த வெள்ளை அறிக் கையின் சூடான விவாதத்திற்குத் தலைமை தாங்கியதோடு கடந்த நவம்பர் மாதம் அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை நிறைவேற் றும் விவாதத்திற்கும் தலைமை தாங்கினார் என அவைத் தலை வர் கிரேஸ் ஃபூ குறிப்பிட்டார். தேசத் தந்தையும் முன்னாள் பிரதமருமான திரு லீ குவான் இயூவின் மறைவுக்குப் பிறகு எல்லா சிங்கப்பூரர்களும் அவ ருக்கு அஞ்சலி செலுத்த நாடாளு மன்றத்தையும் அவர் திறந்துவிட் டார் என்றார் திருவாட்டி ஃபூ.