You are here

மலேசியா: போலிஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்

ஜோகூர் பாரு: மலேசியாவில் உள்ள எல்லா போலிஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த திட்ட மிட்டுள்ள தாக மலேசிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பல போலிஸ் நிலையங் களில் இத்தகைய கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் குறிப்பாக கடை வீடுகளில் இத்தகைய கேமராக்கள் இன்னும் பொருத்தப் படவில்லை என்றும் மலேசிய உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மது கூறினார். சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு போலிஸ் நிலையத்தில் ஒரு போலிஸ்காரர் ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறி னார்.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சுபாங் ஜெயா போலிஸ் நிலையத்தில் 29 வயது போலிஸ்காரர் வெலன்டினோ மெசா இறந்து கிடந்தார். அவரது தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் அவரை சுட்டவர்கள் மிக அருகில் இருந்து சுட்டிருக்க வேண்டும் என்றும் போலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.