You are here

புதுப்புது அனுபவங்கள், திருப்தியான வாழ்க்கை

  • ‘தி கோல்டன் ரூல் பார்பர் கோ’ நிறுவனத்தின் ஊழியர்கள்.

மாதங்கி இளங்கோவன்

அர்ஜெண்டினா காற்பந்துக் குழு வினர் அண்மையில் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது அவர்களுக்கு முடிதிருத்தும் அரிய வாய்ப்பைப் பெற்றனர் ‘தி கோல்டன் ரூல் பார்பர் கோ’ முடிதிருத்தும் நிறுவன ஊழியர்கள். அங்கு பணிபுரியும் ஒரே இந்தியரான சிவகுரு ராஜாகண்ணு இதுபோன்ற சுவையான அனுபவங் களை இந்தப் பணி மூலம் தாம் பெறுவதாகக் கூறினார். கல்வியில் அதிக நாட்டம் இல்லாதிருந்ததால் படிப்பை நிறுத்திவிட்டு வேலை தேட எண்ணினார் சிவகுரு, 24. அந்தச் சமயத்தில், தாம் எப்போதும் முடிதிருத்தம் செய்து கொள்ளும் ‘தி கோல்டன் ரூல் பார்பர் கோ’வுக்கு முடிதிருத்தச் சென்ற சிவகுரு, அந்தக் கடையின் முதலாளியிடம் முடிதிருத்தும் சேவை பெற்றுக்கொண்டே பேச்சுக் கொடுத்தார்.

தாம் வேலை தேடுவது பற்றி அவரிடம் சிவகுரு குறிப்பிட்டதும் தன்னுடைய நிறுவனத்திலேயே பணிபுரிய சிவகுருவுக்கு விளை யாட்டாக அழைப்பு விடுத்தார் அந்நிறுவன உரிமையாளர். முடிதிருத்தம், முடியலங்காரம் பற்றி அவ்வளவாகத் தெரியாத போதும் முயற்சி செய்து பார்க்க லாம் என்ற எண்ணத்தில் அந்தப் பணியில் சேர்ந்தார் சிவகுரு. அவருடன் மேலும் 18 இளையர் கள் அங்கு ஆடவருக்கு முடிதிருத் தும் பணிபுரிகின்றனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர், சக ஊழியர்கள் ஆகியோர் சிவகுரு வுக்கு வழிகாட்டிகளாக இருந்து தொழில் கற்பித்தனர்.

சிங்கப்பூருக்கு அண்மையில் வந்திருந்த அர்ஜெண்டினா காற்பந்துக் குழுவினருக்கு முடிதிருத்தும் வாய்ப்புப் பெற்றதோடு அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு பெற்றனர் சிவகுரு (முன்வரிசையில் அமர்ந்திருப்போரில் இடமிருந்து இரண்டாவது) உள்ளிட்ட ‘தி கோல்டன் ரூல் பார்பர் கோ’ நிறுவனத்தின் ஊழியர்கள்.