You are here

மறதி நோயாளிகளுக்கு 24 மணி நேர சேவை நிலையம்

நீ சூன் வட்டாரத்தில் வசிப்பவர் களுக்கு பலதரப்பட்ட பராமரிப்பு சேவைகளை வழங்கி வரும் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம் அந்த பட்டியலில் மற்றொரு சேவையையும் சேர்த்துள்ளது. தாதிமை இல்லத்தில் மறதி நோயாளிகளுக்காக 24 மணிநேர மும் இயங்கும் சேவை நிலையமாக அது நேற்று அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அப்படி ஒரு மறதி நோயாளி வழிதவறிச் சென்றுவிட்டால் பொதுமக்கள் அவர்களை இத் தகைய சேவை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அங்கு பராமரிப்பு உதவியாளர் கள் நோயாளிகளின் மனநிலையை கட்டுப்படுத்தி அவர்களின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள உதவுவர். அதுவரை நிலையம் அவர்களை பராமரிக்க உதவும்.

தற்போது சிங்கப்பூரில் இது போன்று மறதி நோயாளிகளுக் காக 58 சேவை நிலையங்கள் உள்ளன. ஆனால் ஒரு தாதிமை இல்லத்தில் இந்த நிலையம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு மேலாக, மறதி நோய் குறித்த தகவல்களைப் பெறவும் நோயாளிகளின் தேவைக்கேற்ப பணிப்பெண்களுக்கும் பராமரிப் பாளர்களுக்கும் தகுந்த பயிற்சி தரவும் இந்தச் சேவை நிலையம் முற்படும். அதன் தொடர்பில் உதவி பெறக்கூடிய அமைப்பு களையும் நிலையம் பரிந்து ரைக்கும்.

ஸ்ரீநாராயண குருவின் 163வது பிறந்தநாளையொட்டி நேற்றுக் காலை நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளுள் ஒன்று. தாதிமை இல்ல மூத்தோரும் இதில் பங்கேற்று மகிழ்ந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்