You are here

பாரதிராஜா: பொருளாதார பலம் மிகவும் முக்கியம்

  • ‘குரங்கு பொம்மை’ படத்தில் பாரதிராஜா, விதார்த்.

அண்மையில் வெளியான ‘குரங்கு பொம்மை’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற் றுள்ளது. விமர்சன ரீதியாக கிடைத்த இந்த வெற்றியை வசூல் ரீதியிலான வெற்றியாக மாற்ற படக் குழுவினர் முயற்சி மேற் கொண்டுள்ளனர். இப்படத்தில் இயக்குநர் பாரதி ராஜாவின் நடிப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர். அப்போது, ‘குரங்கு பொம்மை’ கதையும் அதில் தனக்கான கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்ததாகத் தெரிவித்தார். தான் நடித்த காட்சிகளைத் திரையில் பார்த்த போது தம்மாலேயே நம்ப முடிய வில்லை என்றும் கூறினார்.

“சில காட்சிகளைத் திரையில் பார்த்தபோது என்னை நானே ரசிக்கும்படி அமைந்திருந்தன. நான் கிராமத்து வாழ்க்கையையும் மேல்மட்ட மக்களின் வாழ்க்கை யையும்தான் படமாக்கி இருக்கி றேன். நான் தொடாத நடுத்தர மக்களின் வாழ்க்கையை ‘குரங்கு பொம்மை’ படம் வெளிப்படுத்தி இருந்தது,” என்றார் பாரதிராஜா. வெறும் 300 ரூபாயுடன் சென்னைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், திரைத்துறையில் நன்றாக சம்பாதித்துவிட்டதாக வெளிப்படையாகக் கூறினார். “எனக்கு கஞ்சத்தனம் உண்டு என்று சொல்வார்கள். இப்போது பிறருக்கு நிறைய கொடுக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது.

பொருளாதாரம்தான் உறவுகள், நட்பு உள்ளிட்ட சமூக விஷயங்கள் அனைத்தையும் தீர்மானிக்கிறது. “திரைத்துறையில் என்னுடன் பயணம் செய்த பல அறிவாளிகளும் திறமைசாலிகளும் பொருளாதார நிலையில் தாழ்ந்து இருந்ததால் காணாமல் போய்விட்டனர். “எனவே திரையுலகத்தினர் தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வது மிகவும் முக்கியம்,” என்று அறிவுறுத்தி னார் பாரதிராஜா. அடுத்து விதார்த்தை வைத்து ‘ஓம்’ படத்தை தயாரித்து வரும் இவர், ‘படைவீரன்’ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

‘குரங்கு பொம்மை’ படத்தில் பாரதிராஜா, விதார்த்.