You are here

என்னால் முடியும்: நஸ்ரியா உறுதி

  • நஸ்ரியா

மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் நஸ்ரியா. அவரால் தற்போதுள்ள நடிகைகளுக்கு ஈடுகொடுக்க முடியுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக நீண்ட நேரமும் வெளியூர்களிலும் நடைபெறும் படப்பிடிப்பில் அவரால் பங்கேற்க முடியுமா என்று திரையுலகினர் சந்தேகத்துடன் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் நஸ்ரியாவோ திட்டமிட்டு கால்‌ஷீட் கொடுக்கப் போவதாகவும் தனக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிப்பதில் எந்தச் சிக்கலும் எழாது என்றும் திரையுலக நண்பர்களிடம் தெளிவாகக் கூறி வருகிறாராம். “எனது மறு பிரவேசம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும்,” என்கிறார் நஸ்ரியா.