You are here

ஃபுளோரிடா தீவுகளைத் தாக்கிய இர்மா சூறாவளி: பல்லாயிரம் பேர் வெளியேற்றம்

  • படம்: ராய்ட்டர்ஸ்

நூறாண்டு காலத்தில் அட்லாண் டிக் கடலோர புயல் சீற்றத்திலேயே ஆக மோசமானது என்று கருதப் படும் இர்மா சூறாவளி அமெரிக் காவின் தென்கிழக்கு மாநிலமான ஃபுளோரிடாவின் தீவுகளைத் தாக்கியுள்ளது. மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதைத் தொடர்ந்து புயல் எச் சரிக்கை நான்காம் எண்ணுக்கு உயர்த்தப்பட்டது. கியூபா கடலோரப் பகுதிகளை பலமாகத் தாக்கிய சூறாவளி, அதன் பின்னர் பலவீனமடைந் ததால் எச்சரிக்கை ஐந்திலிருந்து மூன்றாம் எண்ணுக்கு இறக் கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வலுவடைந்த இர்மா சூறாவளி ஃபுளோரிடா கீஸ் என்றழைக்கப்படும் தீவுக் கூட்டத்தை தாக்கியதாக மையாமி யிலுள்ள தேசிய சூறாவளி எச் சரிக்கை நிலையம் சிங்கப்பூர் நேரப்படி நேற்று மாலை தெரிவித் தது. முன்னதாக, மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி யினர், அதாவது 6.3 மில்லியன் மக்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேற உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஃபுளோரிடா மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்ட னர். ஆனால், தப்பித்துச் செல்ல காலம் தாழ்த்திய சிலர் தங்களது வீடுகளிலேயே தங்கி இருப்பதால் அவர்களின் கதி என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இர்மா சூறாவளி ‘ஃபுளோரிடா கீஸ்’ தீவுக்கூட்டத்தை நெருங்கிய வேளையில் ஹவானாவின் எல் மலேகான் பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு பேரலைகள் எழும்பின. படம்: ராய்ட்டர்ஸ்