You are here

ஜாலான் காயுவில் வசதி குறைந்தோருக்கு கூடுதல் உதவி

  • படம்: சாவ் பாவ்

ஜாலான் காயு வட்டாரத்தில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கூடுதல் உதவி கிடைக்க வகைசெய்துள்ளது நேற்றுத் தொடங்கப்பட்ட புதிய உதவித் திட்டம் ஒன்று. குழந்தை மேம்பாட்டு கணக்கில் (CDA) ஒரு முறை நிதி நிரப்பும் இந்தத் திட்டத்தை பிரதமர் லீ சியன் லூங், நேற்று நடந்த ஜாலான் காயு நாள்= கேளிக்கைக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இந்த ஜாலான் காயு குழந்தை மேம்பாட்டு கணக்கில் நிதி நிரப்பும் திட்டம், ஆறு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கானது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குழந் தையின் குழந்தை மேம்பாட்டுக் கணக்கிலும் $400 நிரப்பப்படும். இந்த நிதிக்கு ஈடாக அரசாங்கமும் நிதி வழங்கும். குழந்தைகளின் கல்வி, சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு இந்த நிதி உதவும். குழந்தை போனஸ் நிதியைப் பயன்படுத்த அனுமதிபெற்ற குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், பாலர் பள்ளிகள், ஆரம்பக் கட்டத் திலேயே உதவும் திட்டங்களை வழங்கும் சிறப்புக் கல்விப் பள்ளி கள், உதவி தொழில்நுட்பக் கருவி விநியோகிப்பாளர்கள், மருத்துவ மனைகள், மருந்தகங்கள், மூக்குக்கண்ணாடிக் கடைகள் போன்ற வற்றில் இந்த நிதியைப் பயன் படுத்தலாம்.

ஜாலான் காயு நாள் - கேளிக்கைக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் முறுக்கு சுற்றப் பழகும் பிரதமர் லீ சியன் லூங். நிகழ்ச்சியில் குடும்பப் பிணைப்பை வலுவாக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நடவடிக்கைகளையும் பிரதமர் லீ பார்வையிட்டார். படம்: சாவ் பாவ்