You are here

சமுத்திரக்கனியின் மாறுபட்ட தோற்றம்

3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மில்டன் தயாரிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘கோலி சோடா’. மிகக் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டுப் பெரிய வெற்றி பெற்ற படம் இது. தற்பொழுது அதன் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் மார்க்கெட் ‘தாதா’வுடன் மோதித் தங்கள் அடையாளத்தைப் பெற்றுக் கொண்ட சிறுவர்கள் இரண்டாம் பாகத்தில் எதையாவது சாதிக்க நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் காற்பந்து விளையாட்டைத் தேர்வு செய்கிறார்கள். செல்லும் இடமெல்லாம் வெற்றி பெறுகிறார்கள். ‘ஸ்போர்ட்ஸ் மேன்’ என்ற பெரிய அடையாளம் கிடைக்கிறது. மார்க்கெட் பசங்களை இந்த அளவிற்கு வளர விடக்கூடாது என்று சிலர் செய்யும் சதிகளில் இருந்து மீண்டு தங்களின் அடுத்த அடையாளத்தை எப்படிக் கைப்பற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இதில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களை வழிநடத்தும் ஓர் ஆசான் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நரைத்த தாடி, மீசை, கண்ணாடி என முதியவர் தோற்றத்தில் வருகிறார்.