You are here

500 விக்கெட் சாதனை

  • ஜேம்ஸ் ஆண்டர்சன்

லண்டன்: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (படம்) நேற்று முன் தினம் வெஸ்ட் இண்டீஸ் அணியு டன் பொருதிய ஆட்டத்தில் 500 வது விக்கெட் சாதனை படைத்துள் ளார். இந்தச் சாதனைப் பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்டுகள்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (145 ஆட்டங்களில் 708 விக் கெட்டுகள்), இந்தியாவின் அனில் கும்ப்ளே (619 விக்கெட் டுகள்), ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் (563 விக்கெட்), வெஸ்ட் இண்டீசின் கோர்ட்னி வால்ஷ் (519 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையி லான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. கிரெய் பிராத் வெயிட்டை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிளீன் போல்டு ஆக்கினார். இது டெஸ்டில் அவரது 500வது விக்கெட் (129 டெஸ்ட்) ஆகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட் மைல்கல்லை கடந்த 6வது வீரர், முதல் இங்கிலாந்து வீரர் ஆகிய சிறப்புகளை 35 வயதான ஆண்டர் சன் பெற்றார். இதே மைதானத்தில் தான் 2003ஆம் ஆண்டு ஆ ண் ட ர் ச ன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை த் தொடங் கினார்.