You are here

நல்லுறவின் நட்பு நாடுகள்

சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும் ஆசியான் நாடுகளில் ஒன்று இந்தோனீசியா. இந்தோனீசியாவின் மிகப் பெரிய முதலீட்டாளர்களில் தனிச்சிறப்புமிக்க ஒன்று சிங்கப்பூர். ஆசியான் என்ற தென்கிழக்காசிய அமைப்பு 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அந்த அமைப்பைத் தோற்றுவித்த தொடக்க கால உறுப்பினர்களாக சிங்கப் பூரும் இந்தோனீசியாவும் பெரும் பங்கு வகித்து வருகின் றன. இரு நாடுகளும் அரை நூற்றாண்டு காலமாக அரு மையான அரசதந்திர உறவைப் பேணி காத்து வந்து உள்ளன.

இந்த உறவு அடுத்த அரை நூற்றாண்டில் இன்னும் செழிக்க வேண்டும். அதற்கு சுற்றுப்பயணத்துறை, உள் கட்டமைப்பு, மின்னிலக்கப் பொருளியலை மேம்படுத் துதல் முதலிய துறைகளில் இரு நாடுகளும் மேலும் பல வகைகளில் ஒத்துழைக்க முடியும். இதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று பிரதமர் லீ சியன் லூங் அண்மையில் இந்தோனீசிய முதலீட்டுக் கருத்தரங்கில் வலியுறுத்தி இருக்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு ஒருபுறம் இருக்க, சிங்கப்பூர் பிரதமருக்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கும் இடையில் நிலவும் உன்னத மான நல்லுறவு காரணமாக இருநாட்டு மக்களுக்கும் பயன் ஏற்படக்கூடிய அனுகூலமும் இருக்கிறது.

சிங்கப்பூரிலும் இந்த வட்டார நாடுகளிலும் ஆண்டு தோறும் ஏற்படக்கூடிய காட்டுத்தீ, புகைமூட்ட விவகாரத் துக்கு முடிவுகட்ட அதிபர் விடோடோ தனிப்பட்ட முறை யில் அதிக முயற்சி மேற்கொள்வதும் எல்லை தாண்டிய புகைமூட்ட விவகாரத்தை மட்டுப்படுத்துவதிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் உள்ள கடப் பாடும் இரு நாட்டு உறவுக்கு இன்னும் உரமாகத் திகழ் கின்றன.

ஆசியானுக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்றதும் ஆசியானை இன்னும் பலமிக்க, ஐக்கியமிக்க அமைப்பாக ஆக்க ஆசியானின் பத்து நாடுகளுடன் பாடுபடப் போவ தாக சிங்கப்பூர் அறிவித்து இருக்கிறது. சிங்கப்பூரின் இந்த முயற்சிக்கு தானும் தன் நாடும் உறுதுணையாக இருக்கப்போவதாக இந்தோனீசிய அதிபர் அதே கருத் தரங்கில் சூளூரைத்து இருக்கிறார்.

சிங்கப்பூர்-இந்தோனீசியா நல்லுறவின் விரிவாக்க வளர்ச்சியின் அறிகுறியாக ஒன்பது புரிந்துணர்வுக் குறிப்புகள் அண்மையில் கையெழுத்திடப்பட்டன. ‘புதிய பாலித்தீவுகள் பத்து’ என்ற ஒரு திட்டம் இடம்பெறப்போகிறது என்றும் சிங்கப்பூருக்கு அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் நல்ல வாய்ப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்றும் தோபா ஏரியில் உருவாக்கப் படும் அனைத்துலக விமான நிலையம் சிங்கப்பூருக்குப் பேருதவியாக இருக்குமென்றும் இந்தோனீசியா அறி வித்து இருக்கிறது.

அதேபோல இந்தோனீசியாவின் போக்குவரத்து, எரிசக்தி துறைகளில் மேலும் உதவிக்கரம் நீட்டக்கூடிய திறன்பாடுகள் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இருக்கின் றன. சிங்கப்பூரிலிருந்து அதிக முதலீடுகள் வருவதைப் இந்தோனீசியா ஆதரிக்கிறது. இதற்கு சிங்கப்பூரும் ஆயத்தமாக இருக்கிறது.

இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் நம்பிக்கை யூட்டும் தொடக்கநிலை புதுத்தொழில்கள் பல உள்ளன. இருநாடுகளின் முதலீட்டாளர்களும் தொழில்முனைவர் களும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

எல்லாவற்றையும வைத்துப் பார்க்கையில் சிங்கப்பூர்- இந்தோனீசியா இரண்டும் அடுத்த அரை நூற்றாண்டுப் பயணத்தை ஒத்துழைப்புடன் சேர்ந்து தொடங்க அருமை யான சூழல் வாய்த்து இருப்பதாகவே தெரிகிறது. கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் அணுக்கமாக ஒத்துழைத்து ஆதாயம் கண்டுள்ளன.

அரசியல் நிலவரையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ள போதிலும் ஒரே நோக்குடைய சிந்தனைகளின் விளைவாக இரு நாடுகளும் பயன்கண்டே வந்துள்ளன.

அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகளிலும் அதே வகை ஒற்றுமையாலும் ஒத்துழைப்பாலும் இருநாடுகளும் மேலும் மேலும் மேம்பாடு காண வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று உறுதியாக நம்பலாம். இரு நாடுகளின் தலைவர் கள், மக்களுக்கு இடையில் நிலவும் அணுக்க தொடர்பு இதற்குப் பக்கபலமாக இருக்கும்.

சிங்கப்பூர்-இந்தோனீசியா நாடுகளின் ஒருமித்த வளர்ச்சி ஆசியான் அமைப்புக்கு மேலும் வலு சேர்க்கும்.