You are here

கோஹ்லி: பத்தாண்டுகளுக்கு சாதிப்பேன்

  • இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோஹ்லி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோஹ்லி இன்னும் பத்தாண்டு களுக்கு கிரிக்கெட்டில் தன்னால் சாதனை படைக்க முடியும் என்று கூறியுள்ளார். “கடினமான பயிற்சியை மேற்கொள்ள எனது உடல் ஒத்துழைத்தால் நான் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு சிறப்பாக விளையாடுவேன்,” என்று கூறியுள்ளார் கோஹ்லி. “பொதுவாக கிரிக்கெட் வீரர் கள், ஆட்டத்தை எப்போது நிறுத் திக்கொள்வது என்று தெரியாம லேயே ஆட்டத்தைத் தொடர்கின் றனர். அது முழுக்க முழுக்க நாம் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சியைப் பொறுத்ததே,” என்றார் 29 வயதைக் கடந்துள்ள கோஹ்லி. “கிரிக்கெட் விளையாட்டில் எவ் வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை எங்களில் பலரும் அறிந்திருக்க வாய்ப் பில்லை. அதைக் காலம்தான் முடிவு செய்யும்.

இதில் நாம் வெளிப்படுத்தும் ஆற்றலுக்கு 70 விழுக்காட்டுப் பங்கு மட்டுமே. ஆற்றலுடன் சிறந்து விளங்க வேண்டுமெனில் அதற்குத் தகுந்த பயிற்சியையும் முயற்சியையும் நாம் கைவிடக் கூடாது. “இது அனை வருக்கும் உள்ள பொதுவான நியதிதான். அது போலவே என்னாலும் கடுமை யான பயிற்சியின்மூலம் இன்னும் பத்தாண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கமுடியும்,” என்றார் கோஹ்லி. ஒருநாள் போட்டி பந்தடிப்பாளர் களுக்கான தரவரிசையில் 887 புள்ளிகளுடன் முதல் இடத்தைத் தக்கவைத் துக்கொண்ட விராத் கோஹ்லி, 60 டெஸ்ட் போட்டிகளில் 4,658 ஓட்டங்களும், 194 ஒருநாள் போட்டிகளில் 8,587 ஓட்டங்களும் எடுத்துள்ளார். இவர் ‘விராத் கோஹ்லி ஃபவுண்டேஷன்’ என்னும் பெயரில் அறநிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது. ஆர்பி=சஞ்சீவ் கோயன்கா குழுமத்துடன் நடத்தப்படும் அந்த அறநிறுவனம், அடித்தள மக்களிடம் விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதில் தங் களை அர்ப்பணிப்பவர்களுக்கும் விளையாட்டில் சாதிப்பவர்களுக் கும் கல்வி உதவிநிதி வழங்கி ஊக்குவித்து வருகிறது. ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாயை கல்வி உதவி நிதிக்காக அளிக்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.