You are here

சிங்கப்பூர்-இந்தோ. உறவைப் பறைசாற்றும் விமான அணிவகுப்பு

சிங்கப்பூர்-இந்தோனீசிய நல்லுற வின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக மற்றொரு நிகழ்ச்சி நேற்று மரினா பே சவுத் தில் நடந்தேறியது. பொன்விழாவைக் குறிக்கும் விதமாக சுமார் இருபது போர் விமானங்கள் நேற்று ‘50’ என்ற எண் வடிவத்தில் வானில் பறந்து சென்றன. சிங்கப்பூர் விமானப் படையும் இந்தோனேசிய விமானப் படையும் இணைந்து அரங்கேற்றிய இந்த கண்கவர் காட்சியை இரு நாட்டுத் தலைவர்களும் மரினா பே சவுத்தின் படகுத்துறை மையத்தில் இருந்து கண்டுகளித்தனர். சிங்கப்பூர் விமானப்படை மற்றொரு விமானப் படையுடன் இனைந்து இதுவரை அரங்கேற்றிய பல சாகசங்களில் இதுவே ஆகப் பெரியதாகவும் மிகவும் கடினமான தாகவும் கருதப்படுகிறது. “இரு நாட்டு விமானப்படைக்கும் இடையே உள்ள பரஸ்பர புரிந் துணர்வும் இணைந்து செயல் படக்கூடிய திறனும் இதிலிருந்து தெளிவாகிறது” என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

சிங்கப்பூர்-இந்தோனீசிய ஐம்பது ஆண்டு உறவைக் குறிக்கும் விதத்தில் இரு நாட்டு விமானப் படைகளின் போர் விமானங்கள் ஐம்பது என்ற எண்ணைக் குறிக்கும் வகையில் (வலது படம்) பறந்து சென்றன. இதனை பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீ சிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் ரசித்தனர். உடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (இடம்), திரு லீயின் துணைவியார் ஹோ சிங் (இடமிருந்து 2வது) அதிபர் ஜோக்கோ விடோடோவின் துணைவியார் இரியானா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்