You are here

நீரிழிவு மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் இருக்கவேண்டும்

வில்சன் சைலஸ்

நீரிழிவு தொடர்பான பரிசோதனை களும் மருத்துவச் செலவுகளும் நீரிழிவைக் கட்டுக்குள் வைப்பதற் குத் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்வதை உறுதிசெய்ய வேண் டும் என்றார் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன். பிற இனத்தவருடன் ஒப்பிடுகை யில் நீரிழிவால் பாதிக்கப்பட்ட மூத்தோரில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பது இந் திய சமூகத்தின் அக்கறைக்குரிய விவகாரமாக இருப்பதைச் சுட்டிய அவர், உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆகியவற்றை மேற்கொள்வதற் கான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என அறிவுறுத் தினார்.

பிரதமர் லீ சியன் லூங் ஆற்றிய தேசிய தினப் பேரணி உரைக்குப் பிந்தைய கலந்துரையாடலுக்கு மக்கள் கழக நற்பணிப் பேரவை நேற்று முன்தினம் ஏற்பாடு செய் தது. அதில் பாலர் கல்வி, அறிவுசார்ந்த தேசம் தொடர்பாக பேசப்பட்டாலும் நீரிழிவு குறித்த அக்கறை சற்று மேலோங்கி இருந் தது. நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கும் செலவுகள் குறித்து கேள்வி எழுப்பியதுடன் உள்ளூர் மருந்தகங்களைத் தவிர்த்துவிட்டு இந்தியா, மலேசியா போன்ற வெளி நாடுகளிலிருந்து குறைந்த விலை யில் மருந்து, மாத்திரைகளை வாங்குவதாகக் குறிப்பிட்டனர்.