You are here

நாடாளுமன்ற நாயகராகிறார் டான் சுவான் ஜின்

  • திரு டான் சுவான் ஜின்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரான டான் சுவான் ஜின், 48, அப்பதவியிலிருந்து விலகி நாடாளுமன்றத்தின் புதிய நாயகராகப் பொறுப்பேற்க இருக்கிறார். வரும் திங்கட்கிழமை நாடாளு மன்றம் கூடும்போது பிரதமர் லீ சியன் லூங் நாடாளுமன்றத்தின் பத்தாவது நாயகராக திரு டான் சுவான் ஜின்னை முன்மொழிய இருக்கிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடு வதற்காக சென்ற மாதம் 7ஆம் தேதி திருவாட்டி ஹலிமா யாக்கோப் நாடாளுமன்ற நாயகர் பதவியில் இருந்து விலகியதால் அப்பதவி காலியாக இருந்தது. “திரு டான் சுவான் ஜின்னை நாடாளுமன்ற நாயகராகத் தாம் முன்மொழியவிருப்பது பற்றி பிரதமர் லீ மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். அவரது அந்த முடிவுக்கு எம்.பி.க்களும் முழு ஆதரவு தெரிவித்தனர்,” என்று பிரதமர் அலுவலக அமைச்சின் அறிக்கை கூறியது.

“நாடாளுமன்ற நாயகராக, நாடாளுமன்ற விவாதங்களுக்குத் திரு டான் சுவான் ஜின் தலைமை வகிப்பார். தேசிய பிரச்சினைகள் தொடர்பான அந்த விவாதங்கள் முழுமையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை அவர் உறுதி செய்வார்,” என்று பிரதமர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். “அந்தப் பதவிக்குத் தேவை யான மனப்பான்மையையும் ஆளு மையையும் திரு டான் கொண்டு இருக்கிறார். தகுதியான மாற்று உறுப்பினரைக் கண்டறிந்தது எளிதான செயல் இல்லை. நாடா ளுமன்ற நாயகர் பதவிக்குச் சிறந்த தேர்வாக டான் சுவான் ஜின்னை அடையாளம் கண்ட போதும் அப்பதவிக்கு அவரை முன்மொழிவதும் சிரமமான முடிவு தான். ஏனெனில், சிங்கப்பூரின் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு செயல்திறனும் துடிப்பும் மிக்க ஓர் அமைச்சரை இழக் கிறது,” என்றார் திரு லீ.