You are here

எல்லாரையும் உள்ளடக்கும் கலைகள் நிதிக்கு $1 மில்லியன்

சமூக சேவை அமைப்புகளின் உதவியைப் பெற்று வரும் சிறார் கள், மூத்த குடிமக்கள், உடற்குறை யாளர்கள் எல்லாரும் அரசாங்க நிதி ஒன்றின் கீழ் தொடர்ந்து கலைச் செயல்திட்டங்களை அனுப விக்கலாம். இதற்கு வகை செய்யும் ‘வீ கேர் ஆர்ட்ஸ் ஃபண்ட்’ என்ற நிதி யில் அடுத்த இரண்டு ஆண்டு களுக்கு $1 மில்லியன் போடப் படும். இதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு நேற்று கையெழுத்தானது. தேசிய கலைகள் மன்றமும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் அந்தக் குறிப்பில் கையெழுத்திட்டன. அவர் தெம்பனிஸ் ஹப் மையத் தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலாசார, சமூக இளையர் அமைச் சர் கிரேஸ் ஃபூ சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கண்காட்சி ஒன்றையும் அமைச்சர் திறந்து வைத்தார். அந்தக் கண்காட்சி அந்த மையத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும். பொதுமக்கள் இலவசமாக கண்காட்சியைப் பார்வையிடலாம். அதில் ஓவியங்கள், புகைப்படங் கள், சிற்பங்கள் பலவும் இடம் பெற்று இருக்கின்றன. அவற்றை ஐந்து சமூக அமைப்புகளின் உதவியைப் பெறும் மூத்த குடிமக் கள் உருவாக்கி இருக்கிறார்கள். வீ கேர் ஆர்ட்ஸ் ஃபண்ட் என்ற நிதி, சிங்கப்பூரில் பரிவுமிக்க எல்லாரையும் உள்ளடக்கும் சமூகத்தைச் சாதிக்கும் ‘எஸ்ஜி கேர்ஸ்’ என்ற தேசிய இயக்கத் திற்கு ஆதரவு அளிக்கிறது.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் நடக்கும் கண் காட்சியில் மூத்த குடி மக்களின் படைப்பு களை கலாசார, சமூக இளையர் அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ பார்வை யிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்