You are here

தனிமையை உணரும் ஒற்றைப் பிள்ளைகள்

  • படம், கூடுதல் செய்தி: திமத்தி டேவிட்

அனன்யா ரவிச்சந்திரன்

பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். வீட்டில் ஒற்றைப் பிள்ளையாக இருந்தால் பள்ளி அல்லது கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பிறகு தனியாளாய் இருக்க வேண்டியிருக்கும். கணினியே கதியாகக் கிடப்பதற்கு ஒற்றைப் பிள்ளையாய் இருப்பதும் ஒரு காரணம். ஓய்வு நாட்களில் ஓடியாடி விளையாடுவதற்குக்கூட துணை யாரும் இல்லாமல் போவதுண்டு. சில வேளைகளில் எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. சிறு வயதில் பெற்றோருடன் அதிக நெருக்கம் இருந்தாலும் பதின்ம வயதை எட்டும்போது சக வயதுப் பிள்ளைகளின் நட்பு பல நேரங்களில் ஆறுதல் அளிக்கிறது. நட்பு வட்டாரங்களிலும் நம்பிக்கைக் குரியவர்கள் கிடைப்பது அரி தாகவே உள்ளது.

இதுபோன்ற கருத்துகள் சில ஒற்றைப் பிள்ளைகளிடம் இருந் தாலும் பெற்றோரின் மொத்த கவனிப்பும் அன்பும் முழுமையாகக் கிடைப்பது உண்மை என்கின்றனர் அவர்கள். ஆனால், அதுவே சில வேளை களில் பிரச்சினை ஆகிறது. பெற் றோரின் அனைத்து கனவுகளையும் எண்ணங்களையும் கொண்டு செலுத்த வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகின்றனர். அதிக அக்கறை என்ற பெயரில் பெற்றோர் அதிகக் கட்டுப்பாடு விதிப்பதாகக் கூறுகிறார் பெயர் வெளியிட விரும்பாத 19 வயது மாணவி ஒருவர்.

பிள்ளைகள் மோகனராஜன், தமிழ்மலர், விக்னேஷ்வரி, நேத்தன் கிரிஷ், பேத்தி கயல் ஸ்ரீ ஆகியோருடன் தாயார் வி கலாமலர் (நடுவில்). படம், கூடுதல் செய்தி: திமத்தி டேவிட்