You are here

சேம் டான்: எதிர்காலத்தில் வேலை இடத்தில் சுகாதாரமும் பாதுகாப்பும் மிக முக்கியம்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழில்நுட்ப மாற்றங்கள் இப் போது படுவேகமாக இடம்பெற்று வருகின்றன. இந்தத் சூழலில் எதிர்காலத்தில் வேலைகள் எப்படி எப்படியெல்லாம் பரிணாமம் பெறும் என்பதைக் கணிப்பது சிரமமான ஒன்று என்று மனிதவள துணை அமைச்சர் சேம் டான் குறிப்பிட்டு இருக்கிறார். எதிர்கால வேலையிடப் பாது காப்பிற்கும் சுகாதாரத்திற்கும் எத் தகைய பாதிப்புகளை ஏற்படுத் தும் என்பதையும் இப்போதே கணிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். எதிர்கால வேலை வடிவம், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் என்பது பற்றிய உலக மாநாட்டில் நேற்று அமைச்சர் உரையாற்றினார்.

சூழ்நிலை இப்படி இருந்தாலும் இத்தகைய சவால்களைச் சமா ளிக்க உதவக்கூடிய சில அணுகு முறைகளை சிங்கப்பூர் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். இன்றைய ஆபத்தான பல வேலைகளை எதிர்காலத்தில் மனித இயந்திரங்கள் செய்ய முடி யும் என்று குறிப்பிட்ட அமைச்சர், மருத்துவ அறிவியல் துறையில் இடம்பெறக்கூடிய புதுப்புது தொழில்நுட்பங்கள் காரணமாக ஊழியர்கள் பாதுகாப்பான சூழ லில் நீண்டகாலத்திற்கு வேலை பார்த்து அதன்மூலம் சுகாதாரத் தில் பரந்த அளவிலான மேம்பாடு களை அனுபவிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

கட்டுமான இடம் ஒன்றில் தொங்குசாரத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்