You are here

சன்டெக் சிட்டியில் சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி

  • படம்: டி ஐடியஸ், இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய விற்பனை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி (SIIEXPO) இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் வணிகத் துறை அமைச்சு அமைத்த இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம், இவ்வாண்டு 80க்கும் மேலான பங்கேற்பாளர்களை அழைத்து வருகிறது. இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியில் ஏறத்தாழ 70 விழுக் காடு பங்களிக்கும் சம்மேளனம், 2012ஆம் ஆண்டு முதல் SIIEXPO வர்த்தகக் கண் காட்சிக்குக் கூட்டாக ஏற்பாடு செய்து பங்கெடுத்து வருகிறது. கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், நவநாகரிக அணிகலன்கள், நவரத்தினக் கற்கள், ஆடைகள், புடவைகள் என ஏராளமான பொருட்களை வருகையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

தப்லா, தமிழ் முரசு, டி ஐடியஸ் நிறுவனம் நடத்தும் நான்கு நாள் வர்த்தகக் கண்காட்சி, சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தின் கண்காட்சி மண்டபங்கள் 401 முதல் 403 ஆகியவற்றில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கிட்டத்தட்ட 100,000 பேர் வர்த்தகக் கண்காட்சிக்கு வருவார் கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சிக்கு வருபவர்கள் பார்ப்பவர் மனதைக் கவரும் இதுபோன்ற நேர்த்தியான ஆபரணங்களை வாங்கும் பொன்னான வாய்ப்பைப் பெறுவர். படம்: டி ஐடியஸ், இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம்