You are here

வடகொரிய விவகாரம்: அரசதந்திர ரீதியில் தீர்வு காண அமெரிக்கா நம்பிக்கை

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் குவாம் தீவைத் தாக்க திட்ட மிட்டுள்ளதாக வடகொரியா அறி வித்துள்ள நிலையில் வடகொரிய விவகாரத்திற்கு அரசதந்திர முறையில் தீர்வு காண முடியும் என்று அமெரிக்கா இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும் வடகொரி யாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள வேளை யில் போர் மூண்டால் அதனால் பேரழிவு ஏற்படும் என்றும் ஆகவே பிரச்சினைக்கு அரச தந்திர ரீதியில் தீர்வு காணவே அமெரிக்கா விரும்புகிறது என்றும் திரு மேத்திஸ் கூறினார்.

குவாம் தீவுக்கு அருகே நான்கு ஏவுகணைகளை விரைவில் பாய்ச்ச திட்டமிட்டுள்ளதாக வடகொரியா வியாழக்கிழமை அறிவித்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியா வுக்கு எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவுக்கு எதிராக வட கொரியா செயல்பட்டால் உலகம் இதுவரை கண்டிராத கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டி வரும் என்று திரு டிரம்ப் கூறினார். நியூ ஜெர்சியில் செய்தி யாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த திரு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இனிமேலும் அமெரிக்காவை மிரட்டிக்கொண்டிருக்க முடியாது என்று கூறினார்.