You are here

சீனா: சுரங்கப்பாதை சுவரில் மோதி நொறுங்கிய பேருந்து; 36 பேர் மரணம்

  • படம்: ராய்ட்டர்ஸ்

சீனாவின் வடமேற்குப் பகுதியில் விரைவுச் சாலை சுரங்கப்பாதை சுவர் மீது பேருந்து மோதியதில் குறைந்தது 36 பேர் மாண்டு போயினர். ஷான்சி மாநிலத்தில் அமைந்துள்ள சியான்=ஹன்ஸே„ங் விரைவுச்சாலையில் இருக்கும் ஒரு சுரங்கப்பாதையின் சுவர் மீது நேற்று முன்தினம் அப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் கூறினர். இவ்விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந் தனர் என்றும் அவர்கள் உடனடியாக மருத் துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் சின்ஹுவா செய்தி தெரிவித்தது.

செங்டு நகரில் இருந்து மத்திய சீனாவில் அமைந்துள்ள ஹெனான் மாநிலத்தில் இருக்கும் லுவோயாங் நகரத்திற்கு அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஓராண்டில் எத்தனை விபத்துகள் நிகழ் கின்றன, அதில் எத்தனை பேர் மடிந்து போகின்றனர் என்பது போன்ற புள்ளிவிவரங் களைச் சீனா வெளியிடுவதில்லை. ஆனாலும், 2013ஆம் ஆண்டில் அங்கு நிகழ்ந்த சாலை விபத்துகளில் ஏறக்குறைய 250,000 பேர் பலியாகி இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருந்தது.

அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டு வதைக் குறைக்க சீனா உறுதிபூண்டுள்ளது. ஆயினும், வெகுவாக அதிகரித்து வரும் கார்களின் எண்ணிக்கை, சாலைகளில் கடுமையான கண்காணிப்பும் சோதனைகளும் இல்லாமை போன்ற காரணங்களால் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை, அதிலும் குறிப்பாக ஊரக சாலைகளில் விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

விபத்துக்குள்ளான பேருந்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 49 பயணிகள் இருந்ததாகக் கூறப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்