You are here

‘தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது கேரளாவிற்கே அவமானம்’

திருவனந்தபுரம்: கேரளாவில் தமி ழக வாலிபருக்கு சிகிச்சையளிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக பலியான வாலிபர் முருகனின் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து பேசினார். “உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் முருகன் என்ற தொழிலாளி மரணம் அடைந்தார் என்ற தகவல் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.

“சிகிச்சையளிக்க மறுத்த அனைத்து மருத்துவமனைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவுக்கே அவ மானகரமான இந்த சம்பவத்திற் காக முருகனின் குடும்பத்தின ரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள் கிறேன்,” என தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கேரள மாநிலம், கொல்லத் தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர் முத்து வுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த முருகனுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருத் துவமனைகளும் மறுத்துவிட்டன.