You are here

நான்கு ஏவுகணைகளைப் பாய்ச்சும் திட்டம் பற்றி வடகொரியா அறிவிப்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் குவாம் தீவுக்கு வெகு அருகில் உள்ள கடல் பகுதியை நோக்கி நான்கு ஏவுகணைகளை பாய்ச்சத் திட்டமிட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. அத்திட்டத்திற்கு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அனுமதி கொடுத்துவிட்டால் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அதாவது இன்னும் ஓரிரு நாட் களுக்குள் ஹவாசோங்-12 ரக ஏவுகணைகளைப் பாய்ச்ச வடகொரியா தயாராக இருப்பதாக வடகொரிய ஊடகத் தகவல்கள் கூறின. அந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதியைக் கடந்து குவாம் தீவுக்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் விழும் என்றும் வடகொரியா தெரி வித்துள்ளது. வடகொரியாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அந்நாட்டை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்தார்.

நியூஜெர்சியில் ஓய்வு எடுத்து வரும் திரு டிரம்ப், “ அமெரிக்காவை அச்சுறுத்தும் நடவடடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டால் இதுவரை உலகம் கண்டிராத கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்கும்,” என்று கூறி யுள்ளார். வடகொரியாவின் செயல்களால் “அதன் ஆட்சி முடிவுக்கு வரக்கூடும்” என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. வடகொரியா மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவும் வேளையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது. அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு ஜப்பானை ஒட்டி அமைந்துள்ளது. இத்தீவு வடகொரியாவில் இருந்து 3356 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தீவு அமெரிக் காவின் முக்கிய ராணுவத் தளமாக உள்ளது.