You are here

வலுவான நட்புக்கு வழிவகுத்த அணிவகுப்பு சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளி மாணவி

‌ஷிபியா ஜுட்ஸ் ராபின், கிரெசென்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி திருநாவுக்கரசு ஹர்‌ஷினி ஆகிய இருவருக்கிடையே நெருக்கமான நட்புறவு வளர்த்துள்ளது இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மேற்கொள் ளப்படும் ஒத்திகைகள். தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்வது இரு வருக்கும் இது முதல்முறை. சென்ற மே மாதம் முதல் மேற்கொள் ளப்படும் ஒத்திகைகளின்போதுதான் இவ் விருவரும் சந்தித்தனர். ஒவ்வோர் ஒத்திகையின்போதும் இருவருக் கிடையே நட்பு வளர்ந்தது. புதிய அனுபவத்தையும் அவர்களுக்கு வழங்கியது அணிவகுப்பு. பள்ளியின் சாரணர் குழு விலிருந்து இரு மாணவிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுவர் என்றும் அதற்குத் தேர்வுச் சுற்றுகள் இருக்கும் என்றும் ஆசிரியர் கூறிய போது, தாம் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் பயிற்சி மேற் கொண்டதாகக் குறிப் பிட்டார் ‌ஷிபியா ஜுட்ஸ் ராபின்.

இந்த அரிய வாய்ப்பைப் பெற்றதில் பெருமைகொள்ளும் ‌ஷிபியா, “அணிவகுப்பின்போது அரை மணி நேரம் அசையாமல் நிற்பது முதலில் கடினமாக இருந்தாலும் இந்தப் புதிய அனுபவம் புத்துணர்ச்சி அளித்து என்னைத் தூண்டியது,” என்றார். தொடக்கப்பள்ளியில் நவீன நடனக் குழுவில் இருந்த அவர், உயர்நிலைப் பள்ளியில் புதிய அனுபவம் பெறுவதற்காக சாரணர் குழுவில் சேர்ந்ததாகக் கூறினார்.