You are here

சென்னை சில்க்ஸ் கட்டட வளாகத்தில் உடைந்தது பெட்டகம், சிதறின வைரங்கள்

சென்னை: அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தால் உருக்குலைந்து போயுள்ள சென்னை சில்க்ஸ் கட்டட வளாகத்தில், இடுபாடுக ளில் புதையுண்ட பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று உடைந்ததில் அதில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைரப் பொருட்கள் சிதறதியுள்ளன. கடந்த மே மாதம் 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீப்பிடித்தது. பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக உருக் குலைந்த அந்தக் கட்டடம் முற்றி லுமாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. இந்நிலையில், அந்தக் கட்டடத் தில் 3 பாதுகாப்பு பெட்டகங்கள் இருந்ததும் அவற்றில் தங்க, வைர நகைகள், ரொக்கப் பணம், வெள்ளிப் பொருட்கள் வைக்கப் பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கட்டட இடிபாடு களில் இருந்து பெட்டகங்களை மீட்கும் பணி துவங்கியது. இரு தினங்களுக்கு முன்னர் ஒரு பெட் டகம் பத்திரமாகத் திறக்கப்பட்டு அதில் இருந்த 400 கிலோவுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் மீட்கப் பட்டன.

இந்நிலையில், இரண்டாவது பெட்டகம் இருக்கும் இடம் நேற்று முன்தினம் தெரியவந்தது. எனி னும் அந்தப் பெட்டகம் ஏற்கெனவே கதவு உடைந்து காணப்பட்டது. மேலும், அதில் இருந்த விலை உயர்ந்த வைரங்களும் தங்க நகை களும் அந்த இடத்தில் சிதறிக் கிடந்தன. பெட்டியில் மீதமிருந்த நகை களை மட்டும் ஊழியர்கள் மீட் டுள்ள நிலையில், இடிபாடுகளுடன் கலந்துவிட்ட இதர நகைகளை சல்லடை போட்டுத் தேடி வருகின் றனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.