You are here

கார்பன் திட்டத்தை எதிர்த்து நேற்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை: மத்திய அரசு செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட் டத்தை எதிர்த்து நேற்று புதுக்கோட்டையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய வாகனங்களில் பொதுமக்கள் வந்து இறங்கியதால் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற புதுக்கோட்டை, மதிகொண்ட ஐயனார் திடல் பகுதியில் போக்கு வரத்து நிலைகுத்தியது. நெடுவாசல், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட் டுள்ளது. ஆனால் இதற்கு நெடுவாசல் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தத் திட்டத்தை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டக் குழு வினர் திட்டமிட்டனர். ஆனால் இதற்கு காவல் துறை அனுமதி அளிக்க வில்லை. இதையடுத்து போராட்டக் குழுவினர் மதுரை உயர் நீதிமன்றத்தை அணுகி, போராட்டம் நடத்த அனுமதி பெற்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் புதுக்கோட்டை யில் முன்பே அறிவித்தபடி, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லா யிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார் பன் திட்டத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். குறிப்பாக பெண்கள் கும்மி அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத் தினர். இதனால் புதுக்கோட் டையில் பரபரப்பு நிலவியது.