You are here

இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பு; $600 பில்லியன் அமெரிக்கா மசோதா

வா‌ஷிங்டன்: இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் வரும் நிதியாண்டில் 621.5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும் பல்வேறு துறைகளில் நட்புறவை பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இவற்றில் தீவிரவாதத்தை ஒழிக்கும் போர், ராணுவத்துறை ஒத்துழைப்பு போன்றவை முக்கியமான அம்சங்களாகும். இந்தியாவுக்குத் தேவையான அதிநவீன போர் கருவிகளை வழங்குவது, இந்தியா-அமெரிக்கா முப்படை வீரர்கள் இடையே கூட்டுப்போர் பயிற்சி ஆகியவற்றுக்காக தனி ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் வரும் நிதியாண்டில் 621.5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மசோதாவை இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான அமி பேரா தாக்கல் செய்தார். இந்த மசோதாவை உறுப்பினர்களிடையே அறிமுகப்படுத்தி உரையாற்றிய அமி பேரா, “உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடாக அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியாவும் திகழ்ந்து வருகின்றன,” என்று குறிப்பிட்டார்.