You are here

டிரம்ப் மகனுடன் சந்திப்பு: ரஷ்ய முன்னாள் உளவுத் துறை அதிகாரியும் உடன் இருந்தார்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் ரஷ்ய வழக் கறிஞரை டிரம்ப் மகன் சந்தித்தது தொடர்பான சர்ச்சை நீடிக்கும் வேளையில் ரஷ்ய முன்னாள் உளவுத் துறை அதிகாரி ஒருவரை யும் ஜான் டிரம்ப் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

என்பிசி ஊடகம் செய்தி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ரஷ்ய மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்துள்ள அந்த அதிகாரி முன்னாள் ரஷ்ய உளவாளி என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான பிரச்சினைகள் அதிபர் டிரம்ப்புக்கு தலைவலியாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த செய்தி அவருக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

ரஷ்ய வழக்கறிஞரை ஜான் டிரம்ப் சென்ற ஆண்டு ஜூன் 6ஆம் தேதி டிரம்ப் டவரில் சந்தித்துப் பேசியபோது குறைந்தது எட்டு அதிகாரிகள் உடன் இருந்ததாகக் கூறப் படுகிறது. ரஷ்ய முன்னாள் ராணுவ அதிகாரியான அக்மெட் சின், அந்த சந்திப்பின்போது தானும் உடன் இருந்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால் தன் ரஷ்ய உளவுத் துறை அதிகாரி என்று கூறப் படுவதை அவர் மறுத்துள்ளார். ரஷ்ய ராணுவப் பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி யதாகக் கூறிய அக்மெட்சின் உளவுத் துறை அதிகாரியாக தான் பணியாற்றவில்லை என்று கூறியுள்ளார்.