You are here

முறைகேடாக மருந்துச்சீட்டு தயாரித்த மருத்துவருக்கு $10,000 அபராதம்

பணியிலிருந்து ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், முறைகேடாக மருந்துச்சீட்டு தயாரித்த மருத்துவருக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வேறொரு மருத்துவரின் பெயர் முத்திரையைப் பயன்படுத்தி 100 ‘டுரோமின்’ மாத்திரைகள் கோரும் மருந்துச்சீட்டை 55 வயது கூ புக் குவோங் தயாரித்தார். தமது மனைவிக்காக உடல் எடையைக் குறைக்கும் மாத்திரைகளுக்கான மருந்துச்சீட்டை அவர் தயாரித்ததாகத் தெரிய வந்துள்ளது. கூவுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.