You are here

மேம்பாலக் கட்டுமானம் இடிந்து விழுந்தது; கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி ரத்து

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டில் இருந்து தீவு விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் துணைச் சாலைக்கு அருகே நேற்று அதி காலை மேம்பாலக் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்; மேலும் பத்துப் பேர் காயமடைந்தனர். இதையடுத்து, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நிலப் போக்குவரத்து ஆணையம் பாது காப்பு நடைமுறைகள் குறித்து சோதனை செய்வதற்காக தனது மற்ற எல்லா சாலை, ரயில் கட்டு மானத் தளங்களிலும் தற்காலிக மாகப் பணிகளை நிறுத்தியது.

முன்வார்ப்பு கான்கிரீட் பாளங்களைத் தாங்கும் தூணின் மேற்பகுதியில் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டிருக்கும் திண்டு இடிந்து விழுந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற் கட்ட விசாரணைத் தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் 31 வயது சீன நாட்டு ஆடவர் சம்பவ இடத்தி லேயே மாண்டுபோனதைத் துணை மருத்துவப் படையினர் உறுதி செய்தனர். ஆறு பங்ளாதே‌ஷியர், இந்தியர் ஒருவர், சீனர் மூவர் என இந்த விபத்தில் காயமடைந்த பத்துப் பேர் சாங்கி பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்களில் எழுவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக வும் மற்ற மூவரும் சிகிச்சைக்குப் பின் தங்குமிடத்திற்குத் திரும்பி விட்டதாகவும் சாங்கி பொது மருத்துவமனை தெரிவித்தது.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட ஏழு ஊழியர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். விபத்தையடுத்து, தனது எல்லா கட்டுமானத் தளங்களிலும் பாதுகாப்புச் சோதனை நடவடிக் கைகள் இடம்பெற்றதாக ஆணை யம் குறிப்பிட்டது. அந்த மேம்பாலக் கட்டுமானப் பணியை மேற்கொண்டிருந்த ஆர் கிம் பியாவ் (ஓகேபி) நிறுவனம் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுள் ளது. 2015ல் ஊழியர் ஒருவருக்கு மரணம் விளைவித்த சம்பவத்திற் காக கடந்த செவ்வாய்க்கிழமை அந்நிறுவனம் தண்டிக்கப்பட்டது. அதற்கு முன்னர், இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை அந்நிறுவனம் தவறிழைத்தோர் பட்டியலில் இடம்பெற்றது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து மாண்ட ஊழியரின் உடலை அப்புறப்படுத்தும் பணியில் போலிசார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்