You are here

ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள்; பணத்தைத் திருப்பி கேட்கும் இந்தி ரசிகர்கள்

லண்டனில் உள்ள வெம்பிளே பகுதியில் கடந்த 8ஆம் தேதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மான் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்கள் பாடப்படும் இந்நிகழ்ச் சிக்கு ‘நேற்று இன்று நாளை’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல் கள் மட்டுமே பாடப்படும் என்பதை அறியாத பல வட இந்தியர்களும் ஆர்வத்தோடு நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

நிகழ்ச்சி முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்ப்பாடல்களை மட்டுமே பாடியதால் வட இந்தியர்கள் கடுப்பாகி பாதியிலேயே வெளியேறினர். இதுதொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் வடஇந்திய ரசிகர்கள் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இசை நிகழ்ச் சிக்கான டிக்கெட் கட்டணத்தையும் திருப்பியளிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஹ்மானுக்கு ஆதரவாகவும் அவரது ரசிகர்கள் தங்களது கருத்துகளை டுவிட்டரில் பதி விட்டுள்ளனர்.