You are here

லாரிகள் மோதிய விபத்தில் மூவர் காயம்; பொருட்கள் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு

  • படம்: ஜோசஃப் நாயர்

இரண்டாவது பாலத்தின் மலேசிய பகுதியில் நேற்று பிற்பகலில் இரு லாரிகள் மோதிக்கொண்டன. அதனைத் தொடர்ந்து சாலை மீது விழுந்த பொருட்களால் போக்கு வரத்து தடைப்பட்டது. ஜோசஃப் நாயர் என்னும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வாசகர் அனுப்பிய புகைப் படம் லாரி ஒன்று பக்கவாட்டில் சாய்ந்து கிடப்பதையும் பொருட்கள் சாலையில் சிதறிக் கிடப்பதையும் காட்டியது. பிற்பகல் 2 மணியளவில் மலேசிய சுங்கச்சாவடிக்கு 500 மீட்டர் தூரத் திற்கு முன்னதாக இரு லாரிகளும் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் ஜோகூர் பாரு நோக்கிச் செல்வதற்கு சாலையின் ஒரு தடம் மட்டுமே திறந்துவிடப்பட்டது. லாரி சாய்ந்ததன் காரணமாக காலிப் பெட்டிகள் சாலையில் சிதறியது மைக்கல் பே திரைப்படத்தில் வருவதைப்போல இருந்ததாக திரு நாயர் தெரி வித்தார். காரில் நண்பருடன் சென்றிருந்த அவர் தலையில் ரத்தக்காயத்துடன் இருந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு உதவினார்.

மற்றொரு லாரி ஓட்டுநருக்கும் லாரியிலிருந்த மற்றொருவருக்கும் கையிலும் தலையிலும் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயமடைந்த மூவ ராலும் நிற்க முடிந்ததாக அவர் சொன்னார். இரு சக்கரங்கள் தனியாகக் கழன்று சாலையில் கிடப்பதை ஃபேஸ்புக் காணொளி படத்தில் காண முடிந்தது. பிற்பகல் 3.15 மணிவாக்கில் துவாஸ் சோதனைச் சாவடிப் பகுதியில் போக்குவரத்து சீராக இருந்ததை நிலப்போக்குவரத்து ஆணையத்தின் One Motoring இணையத்தளம் காட்டியது.

லாரி ஒன்று சரிந்ததுடன் இரு சக்கரங்கள் கழன்று சாலையில் தனியாக நின்றன. படம்: ஜோசஃப் நாயர்