You are here

மேத்யூஸ்: ‘கேட்சு’களைத் தவறவிட்டதால் தோற்றோம்

கார்டிஃப்: சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியைத் தோற்கடித்து பாகிஸ் தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கார்டிஃப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. முதலில் பந்தடித்த இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிக பட்சமாக தொடக்க வீரர் டிக் வெல்லா 73 ஓட்டங்களும் மேத் யூஸ் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஜுனைத் கான், ஹாசன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 237 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஸார் அலி = பகார் சமான் களமிறங் கினர். முதல் விக்கெட்டுக்கு 74 ஓட்டங்களைச் சேர்த்திருந்தபோது பகார் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸார் அலி 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், இலங்கையின் மலிங்கா வீசிய பந்தில் சர்ஃபராஸ் பந்தடித்தபோது இலங்கைக்கு இருமுறை கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த இரு கேட்சுகளையும் இலங்கை அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். அந்த அதிர்ஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பொறுப்புடன் விளை யாடிய அணித் தலைவர் சர்ஃபராஸ் அகமது பாகிஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்ஃபராஸ் 61 ஓட்டங்களும் அமீர் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.