You are here

முன்னாள் அமைச்சர் ஒத்மான் வோக் மரணம்

  • முன்னாள் அமைச்சர் ஒத்மான் வோக்

சிங்கப்பூரின் முதல் அமைச்சரவையில் அங்கம் வகித்தவரும் நாட்டு நிறுவனர்களில் ஒரு வருமான திரு ஒத்மான் வோக் (படம்) தமது 92வது வயதில் காலமானார். சில காலமாக அவர் உடல்நலம் குன்றி இருந்ததாகத் தெரி விக்கப்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நேற்று பிற்பகல் 12.21 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகப் பிரதமர் அலுவலகம் தெரி வித்தது. திரு ஒத்மானின் நல்லுடல் சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படும். சடங்குபூர்வ பீரங்கி வண்டி அவரது நல்லுடலை சுல்தான் பள்ளிவாசலில் இருந்து புசாரா அபாடி முஸ்லின் இடுகாடு வரை சுமந்து செல்லும் என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறியது.

‘ஒன்பீப்பிள்.எஸ்ஜி’ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி நாளை புதன் கிழமை நிறைவுபெறும். அதுவரை எல்லா அரசாங்கக் கட்டடங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். 1963 முதல் 1981 வரை பாசிர் பாஞ்சாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு ஒத்மான், சமுதாய விவகாரங்கள், கலாசாரம் உள்ளிட்ட துறைகளுக்கான அமைச்சராகவும் செயலாற்றினார். பல இன மக்கள் ஒற்றுமையுடன் வாழும் நாடாக சிங்கப்பூரை உருவாக்கியதில் திரு ஒத்மானுக்குப் பெரும்பங்குண்டு.

அத்துடன், சமூக நலம், விளையாட்டு மேம்பாடு ஆகிய வற்றிற்காகவும் இவர் என்றென்றும் நினைவில் இருப்பார். “திரு ஒத்மான் பின் வோக்கின் மறைவை அறிந்து பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளதுடன் அவரது மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றனர்,” என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது. ஆதரவாகத் திகழ்ந்த திரு ஒத்மான், திரு லீயின் நெருங்கிய தோழர்களில் ஒருவராகவும் விளங்கினார்,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.