You are here

சிங்கப்பூர் இந்தியர் சங்கத்துக்கு இந்தியாவின் உயரிய விருது

  • படம்: ஃபேஸ்புக்

வில்சன் சைலஸ்

சிங்கப்பூரில் வாழும் இந்திய சமூகத்திற்கு பலவிதங்களில் சேவையாற்றி வரும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்துக்கு இந்தியா வின் உயரிய ‘பிரவாசி பாரதிய சமான்’ விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. உலகெங்கும் பரவிக் கிடக் கும் இந்தியர்களைத் தங்கள் வேர்களுடன் இணைக்கும் முயற்சியாக 14வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட வெளிநாட்டு பாரத தினம் எனும் ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாட்டில் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் திரு கே. கேசவபாணி சங்கத்தின் சார்பில் விருதைப் பெற்றுக்கொண்டார்.

இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி போன்ற முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் திரு கேசவபாணி உட்பட ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, சுவீடன் ஆகிய நாடு களிலிருந்து வந்திருந்த வெவ் வேறு அமைப்பினரும் தனி நபர் களும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். சிங்கப்பூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் மாநாடு தொடர்பான நிகழ்ச்சியை சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்தது.

சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் திரு கே. கேசவபாணி (வலது) இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து ‘பிரவாசி பாரதிய சமான்’ விருதைப் பெற்றுக்கொள்கிறார். படம்: ஃபேஸ்புக்